Connect with us

Political News

அடுத்த மாதம் மீண்டும் தொடங்கும் வேக்சின் ஏற்றுமதி

இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “இந்த புதுப்பிக்கப்பட்ட ஏற்றுமதி முறை ‘தடுப்பூசி மைத்திரி’ என அழைக்கப்படும்.

உலகில் எந்தவொரு நாட்டிலும் கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் சில நாடுகள் வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

முன்னதாக இலங்கை, நேபாளம், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளுக்கு இந்தியா அன்பளிப்பாக வேக்சினை்களை அளித்தது. அதேபோல தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கு வணிக ரீதியிலும் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்தச் சூழலில் தான் 2ஆம் அலை ஏற்பட்டு வேக்சின் பற்றாக்குறை மோசமாக இருந்தது. இந்தியர்களுக்கு முதலில் வேக்சின் அளிக்காமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமித செய்வது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்போது வேக்சின் ஏற்றுமதி மற்றும் அன்பளிப்பாக வழங்கும் நடைமுறை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டன. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், பின்னர் அது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. கடந்த மே மாதம் முதல் இந்தியாவில் 18+ அனைவருக்கும் வேக்சின் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இருப்பினும், தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கொரோனா வேக்சின் உற்பத்தி இல்லை.
மேலும், கொரோனா வேக்சின் உற்பத்தியை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் கொரோனா வேக்சின் செலுத்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தற்போது வேக்சின் உற்பத்தியில் இருந்து சிக்கல்களும் நீங்கியுள்ளதால், தடுப்பூசி போடும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தச் சூழலில் அடுத்த மாதம் முதல் கொரோனா வேக்சின்களை அன்பளிப்பாக வழங்குவதும் ஏற்றுமதியும் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி நாளை (செப். 21) அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா தலைவர்கள் கலந்துகொள்ளும் இந்த குவாட் மாநாட்டில் தடுப்பூசிகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “இந்த புதுப்பிக்கப்பட்ட ஏற்றுமதி முறை ‘தடுப்பூசி மைத்திரி’ என அழைக்கப்படும். உலகளாவிய தடுப்பூசி பகிர்வு தளமான கோவாக்ஸ் திட்டத்திற்கு இது உதவும். மேலும் அண்டை நாடுகளுக்கு இதன் மூலம் நம்மால் முன்னுரிமை அளிக்க முடியும். கடந்த ஏப்ரல் மாதம் முதலே இந்தியாவில் வேக்சின் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்த மாதம் முதல் 30 கோடி வேகே்சின்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். பயாலஜிக்கல் இ போன்ற நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டின் கடைசி 3 மாதங்களில் 100 கோடி வேக்சின் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
மற்ற நாடுகளுக்கு கொரோனா வேக்சின் போதியளவு கிடைப்பதை உறுதி செய்ய கோவாக்ஸ் திட்டத்திற்கு வேக்சின் அளிப்போம். அதேநேரம் முதலில் அண்டை நாடுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். அதேநேரம் இந்தியர்களின் தேவை போக அதிகப்படியாக உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படும்” என்று அவர் தெரிவித்தார். தடுப்பூசி ஏற்றுமதியைத் தடை செய்யும் முன் இந்தியா 100 நாடுகளுக்கு சுமார் 6.6 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது

Continue Reading

Entertainment

Watch Latest Movies

Watch latest movies online and explore the best of Bollywood movies, Hollywood movies and Regional Cinema

Continue Reading

Political News

பாகிஸ்தான் பயணம் ரத்து: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தானுக்கு மேற்கொள்ளவிருந்த ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியின் பயணத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திங்கள்கிழமை ரத்து செய்தது.

இங்கிலாந்து ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்ளவிருந்தன. அக்டோபர் 13 மற்றும் 14-ம் தேதி ராவல்பிண்டியில் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. இங்கிலாந்து மகளிர் அணி டி20 தொடரைத் தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவிருந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி போட்டி தொடங்குவதற்கு சற்று முன்னதாக கடைசி நேரத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் காரணம் காட்டி பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.இந்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்திருப்பது அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கும், வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளிக்கவுள்ளது.

Continue Reading

Political News

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் செப். 24-இல் சந்திப்பு: வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 24-ம் தேதி சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை திங்கள்கிழமை அறிவித்தது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செப்டம்பர் 24-ம் தேதி நடைபெறவுள்ள ‘க்வாட்’ அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இந்த வாரம் அமெரிக்க புறப்படுகிறார்.
இதில் பங்கேற்கச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸனுடன் தனிப்பட்ட முறையில் பேச்சு நடத்துவார் என முன்பு தகவல்கள் வெளியாகின.இந்த நிலையில் வெள்ளை மாளிகை இதனை உறுதிபடுத்தியுள்ளது.

இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோரை அமெரிக்க அதிபர் பைடன் சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement

Trending

Copyright © 2021 Tamil Wire