Connect with us

Health

இந்தியாவின் 11 மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு- மத்திய அரசு எச்சரிக்கை !

இந்தியாவில் 11 மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சிரோடைப் II (Serotype-II ) என்ற வகை டெங்கு  கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மக்கள் கூடுவதைத் தவிர்க்குமாறு மாநிலங்களுக்கு உத்தரவிட்டது.

செரோடைப் – II டெங்கு நோய்களை அதிகமாக பதிவு செய்யும் மாநிலங்கள் ஆந்திரா, குஜராத், கர்நாடகா, கேரளா, எம்.பி., உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா.

மத்திய அமைச்சரவை செயலா் ராஜீவ் கெளபா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. டெங்கு பாதிப்பை முன்கூட்டியே கண்டறிதல், காய்ச்சல் உதவி முகாம்கள் நடத்துதல், போதுமான அளவில் பரிசோதனைக் கருவிகள், மருந்துகளை இருப்புவைத்தல் போன்ற நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் கணக்கெடுப்பு, தொடா்பு அறிதல், ரத்த வங்கிகளில் போதுமான அளவு ரத்தம் இருப்பதை உறுதிப்படுத்துதல் தொடா்பான பணிகளுக்காக குழுக்களை மாநில அரசுகள் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

 

 

Continue Reading
1 Comment

1 Comment

  1. Jawn Staff

    July 7, 2017 at 2:50 pm

    Quis autem vel eum iure reprehenderit qui in ea voluptate velit esse quam nihil molestiae consequatur, vel illum qui dolorem eum fugiat quo voluptas nulla pariatur.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Health

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று அதிகம்

Photo: Shutterstock

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்றைய தினசரி கொரோனா பாதிப்பு 1,653 ஆக பதிவான நிலையில் இன்று (19-09-2021) 1,697 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.:

அதன்படி, தமிழகத்தில் இன்று 1,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 45 ஆயிரத்து 380 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 16,969 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 1,56,850 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரே நாளில் 1,594 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 93 ஆயிரத்து 074 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 35,337 ஆக உயர்ந்துள்ளது.

இன்று சென்னையில் மேலும் 232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Continue Reading

Health

கொரோனா 3ஆவது அலையை தடுப்பது மக்கள் கையில் தான் உள்ளது..மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை !!

இந்தியா கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையை சமாளித்துவிட்டு, மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்தியுள்ளது . இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், இன்றும் அது முழுமையாக கட்டுப்படுத்தவில்லை என மருத்துவ வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

முதல் அலை, இரண்டாவது எனயென ஏற்பட்டு அதிக அளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது மூன்றாவது அலை அடுத்த மாதம் ஏற்படும் என இந்திய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (என்ஐடிஎம்) அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது, இந்தியாவில் கொரோனாவின் 3ஆவது அலை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதில் முக்கியமாக வருகிற பண்டிகை காலங்களை குறித்து கடும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

இது குறித்து தேசிய நோய்த்தடுப்புக்கான தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவின் கொரோனா பணிக்குழு தலைவர் டாகடர் என்.கே.அரோரா கூறுகையில், வருகிற நாட்களில் விரைவான தடுப்பூசி பணிகள் மற்றும் கொரோனாவின் புதிய மாறுபாடு தோன்றாத சூழலில், எதிர்வரும் பண்டிகை காலங்களில் மக்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பதை பொறுத்தே 3ஆவது அலை அமையும் என்று தெரிவித்தார்.

போன வருசம் வந்தது வூகான் வைரஸ். இந்த முறை வந்தது டெல்டா வைரஸ். டெல்டா வைரஸ் மாறிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் கொரோனா மல்டிபில் ஆகும் போது கொஞ்சம் மாறும். மரபணு மாற்றம் அடையும்- அதன் காரணமாக ஏற்கனவே உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். கொரோனா மரபணு மாறுவதால் இப்போது மக்களிடம் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி வேலை செய்யுமா செய்யாதா அல்லது தடுப்பூசிகள் வேலை செய்யுமா செய்யாதா என்பதை சொல்ல முடியாது.

நாட்டின் தடுப்பூசியின் வேகத்தை அதிகரிக்கா விட்டால் 3வது அலையில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அது எச்சரித்துள்ளது. பல்வேறு நிபுணர்களுடன் நடத்தப்பட்டு ஆலோசனையின்படி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால் பெற்றோர்கள் மருத்துமனையில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா 3வது அலை இப்போது வரும் அப்போது வரும் என கூறப்பட்டு வந்த நிலையில், நிச்சயம் அடுத்தமாதம் வரும் என இந்திய பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading

Health

3 மாதங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: மத்திய அரசு எச்சரிக்கை !

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் பலராம் பார்கவா, நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் ஆகியோர் நேற்று பேட்டி அளித்தபோது அவர்கள் கூறியதாவது:-

நாடு முழுவதும் கொரோனா நிலவரம் கட்டுக்குள் இருக்கிறது. கேரளாவில் கூட குறைந்து விட்டது. ஆனால், அடுத்த இரண்டு, மூன்று மாதங்கள் பண்டிகை காலங்கள் என்பதால், கொரோனா பரவல் அதிகரிக்காத வகையில் நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

காய்ச்சல் பாதிப்பு அதிகமாகும்போது உஷாராக இருக்க வேண்டும். இதுவரை கிடைத்த பலனை வீணாக்கி விடக்கூடாது.

மக்கள் நெரிசலான இடங்கள்தான், கொரோனா பரவுவதற்கு எளிதான இடங்களாகும். ஆகவே, பண்டிகைகளை பொறுப்புடன் கொண்டாட வேண்டும். பயணங்களை கவனமாக மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். இதுதான் இப்போதைய தேவை.

18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 20 சதவீதம்பேர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டுள்ளனர். 62 சதவீதம்பேர் ஒரு டோஸ் மட்டுமாவது போட்டுள்ளனர்.

நாடு முழுவதும் 34 மாவட்டங்களில் வாராந்திர பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் இருக்கிறது.

Continue Reading
Advertisement

Trending

Copyright © 2021 Tamil Wire