தாராபுரத்தில், தமிழ் புலிகள் கட்சி சார்பில்,சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 252வது நினைவு நாள் அனுசரிப்பு.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 252வது நினைவு நாள், தமிழ் புலிகள் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில் அனுசரிக்கப்பட்டது.பழைய நகராட்சி முன்பு வைக்கப்பட்ட ஒண்டிவீரன் திரு உருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்சியில், மேற்கு மண்டல மாணவரணி செயலாளர் விடியல். தில்லை, மேற்கு மண்டல துணை செயலாளர் ஒண்டிவீரன், மாவட்ட மாணவரணி சந்தோஷ், தாராபுரம் நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், சதாசிவம், கிட்டு சாமி,குன்டடம் ஒன்றிய பொறுப்பாளர்கள் சக்திவேல், பழனிச்சாமி, மாரிமுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழ் முத்து, செந்தில்குமார்,உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு ஒண்டிவீரன் திரு உருவ படத்திற்க்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.