Connect with us

Science

சூரியன் 100 மெகாட்டன் ஹைட்ரஜன் குண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்தது போன்ற சூரிய ஒளியை வெளியிடுகிறது

எக்ஸ்-கிளாஸ் சூரிய வெடிப்பு என்பது சூரியனின் வலுவான வெடிப்பு ஆகும்.
சூரிய ஒளியின் விளைவுகள் அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு குறுகிய வானொலி அலை இருட்டடிப்பு உட்பட பூமியில் உணரப்பட்டன.

ஜூலை 3 ம் தேதி, சூரியன் பூமியை நோக்கி ஒரு தீவிரமான கதிர்வீச்சை அனுப்பியது, இது 2017 ஆம் ஆண்டிலிருந்து மிகப் பெரியது. சூரிய எரிப்பு என அழைக்கப்படும் இந்த ஆற்றல் வெடிப்புகள் செயற்கைக்கோள்களையும் தகவல் தொடர்புகளையும் அச்சுறுத்தும் என்றாலும் பூமியில் உள்ள மனிதர்கள் வளிமண்டலத்தால் அதன் விளைவுகளிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள் . 

Continue Reading

Entertainment

Jungle Cruise – American Fantasy Adventure

Release Date : 2021 (India)
30 Jul 2021 (WorldWide)
Cast :Dwayne Johnson, Emily Blunt
Director :Jaume Collet-Serra

 

Continue Reading

Health

ட்ரைஜீமினல் நரம்பு வலி (முக்கிளை நரம்புவலி) என்றால் என்ன?-Trigeminal Neuralgia

முக்கிளை நரம்புவலி

ட்ரைஜீமினல் நரம்பு வலி (முக்கிளை நரம்புவலி) என்றால் என்ன?- Trigeminal Neuralgia

தலையில் உள்ள 12 மூளை நரம்புகளில் ஐந்தாவதாக இருப்பது தான்  ட்ரிஜெர்மினல்  நரம்பு அல்லது முக்கிளை நரம்பு. இந்த நரம்பு 3 கிளைகளாக பிரிந்து உட்சந்தலை முதல் தொண்டை வரை இருக்கும்  எல்லா பகுதிகளையும் சீராக செயல்பட உதவும். இந்த முக்கிளை  நரம்பில் பிரச்சினை ஏற்பட்டால் அது ட்ரிஜெர்மினல் நரம்பு  வலியை  உண்டாக்கும் .

ஏன் இதை தற்கொலை நோய் என்று அழைக்கிறார்கள் ?

ட்ரிஜெர்மினல் / முக்கிளை  நரம்பின் கிளைகள்,  விரிவடைந்து செயல்பட செய்யும்  எல்லா பகுதிகளிலும்  மிகவும்  கடுமையான  மின்சாரம் தாக்கியதுபோல் வலியை உண்டாக்கும். இதில் பாதிக்கப்படும் நோயாளிகள் மனநிலை தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள் எனவே காலப்போக்கில் அது  தற்கொலையில்  முடியலாம்.

 

யாருக்கு ட்ரிஜெர்மினல்  நரம்பு வலி  வரலாம் ?

இந்தியாவில்  1,00,000  பேரில் வெறும்  4-5 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

  • 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு ட்ரிஜெர்மினல் நரம்பு வலி வரலாம்.
  • பெரும்பாலும் ஆண்களை விட பெண்கள் 60% அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

 

ட்ரிஜெர்மினல் நரம்பு வலி வருவதற்கான காரணங்கள்  என்ன?

  • ட்ரிஜெர்மினல் நரம்பைச்சுற்றி இருக்கும் ரத்த தளத்தில் சில சமயம் விரிவாக்கம் அடைந்தாலோ அல்லது அதில் கொழுப்பு படிவு அடைந்தாலோ அங்கு ட்ரிஜெர்மினல் நரம்பில் அழுத்தம் ஏற்பட்டு ட்ரிஜெர்மினல் நரம்பு வலி  வரக்கூடும்.
  • நரம்பின் பக்கம் வளரும் கட்டிகள் , நரம்பின் கிளையினுள் அழுத்தத்தை உண்டாக்கினாலும் இந்த நிலை  உருவாகலாம்.

 

ட்ரிஜெர்மினல் நரம்புவலியின் அறிகுறி என்ன?

  • திடீரென சில நொடிகளில் இருந்து நிமிடங்களுக்கு ஊசி குத்துவது மற்றும் சுடுவதுபோல் வலி ஏற்படும்.
  • இந்த வலி ஒரு நாள் அல்லது வாரத்திற்கு பலமுறை வரலாம்.
  • பெரும்பாலும் முகத்தின் ஒரு பக்கம் மட்டும் பாதிக்கக்கூடும்.
  • பேசும்போது, முகம் கழுவும்போது, உணவு உண்ணும்போது, முகம் தொடும்போது, தண்ணீர் குடிக்கும்போது, பல் விலகும்போது, சிரிக்கும்போது அல்லது வேகமாக காற்று முகத்தில் வீசும்போதும் இது  போல பல தினசரி செயல்களை செய்யும்போது கடுமையான வலி  ஏற்படும்.

 

மருத்துவரின் ஆலோசனை

இது  75-80% குணப்படுத்தக்கூடிய நோய் ஆகும். குணப்படுத்த பல வாரங்கள் அல்லது சில மாசங்கள் ஆகலாம்.நேரம் தாமதிக்காமல் மருத்துவரின் ஆலோசனைபெறுவது சிறந்தது.

நரம்பு மற்றும் உடல் பரிசோதனை, CBC,MRI scan மற்றும் சில பரிசோதனைகளின் மூலம்  காரணகங்களை கண்டறிந்து மருத்துவர்  நோயின் பாதிப்பு நிலைமையை  அறிந்து, அதற்கேற்ப சிகிட்சையை வழங்குவார்.

 

ட்ரிஜெர்மினல் நரம்பு வலி சிகிச்சை:

  • மருத்துவ சிகிச்சை (anticonvulsant drugs, Muscle relaxants)
  • அறுவை சிகிட்சை (Gamma knife radio surgery, Micro vascular decompression)

Continue Reading

Health

கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு!

zika virus ades

கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு!

கேரள மாநிலத்தில் 24 வயதான கர்ப்பிணி ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தலைவலி, காய்ச்சல், சிவப்பு நிறத்தில் உடலில் ஆங்காங்கே குறிகள் உள்ளிட்டவைகளால் அவதிப்பட்டு வந்த அந்த பெண் கடந்த மாதம் 28ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே, அப்பெண்ணுக்கு நேற்று குழந்தை பிறந்தது. இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டு எல்லை பகுதியில் அப்பெண்ணின் வீடு உள்ளதாகவும், கேரளாவை தாண்டி அப்பெண் வெளியில் எங்கும் செல்லவில்லை. அப்பெண்ணின் தாயாருக்கும் இதேபோன்று அறிகுறி ஒரு வாரத்துக்கு முன்பு ஏற்பட்டதாக அம்மாநில சுகாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, சந்தேகத்திற்கிடமான 19 பேரின் மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவலை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உறுதிபடுத்தியுள்ளார். 19 பேரில் 13 பேர் சுகாதார ஊழியர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

நோயின் அறிகுறிகள் :
டெங்கு, சிக்குன்குனியா ஆகிய நோய்களை பரப்பக்கூடிய ஏடிஸ் வகையை சேர்ந்த கொசுக்கள் தான் ஜிகா வைரஸையும் பரப்புகின்றன. தலைவலி‌, முதுகுவலி, உடல் சோர்வு, கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருக்கும். காய்ச்சல் ஏற்பட்டவுடனே‌ மருத்துவரை அணுக வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்துகின்றனர். வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், காய்ச்சி வடிக்கட்டிய குடிநீரை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களை ஜிகா வைரஸ் தாக்கினால், குழந்தையும் பாதிக்கப்படும் என்பதால் கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

Continue Reading
Advertisement

Trending

Copyright © 2021 Tamil Wire.

error: Alert: Content is protected !!