பாரதப் பிரதமருக்கு ஜகத்குரு ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் நன்றி!…..
பாரம்பரிய ஐந்தொழில் புரியும் கைவினைஞர்களுக்கு
#விஸ்வகர்மா_யோஜனா_திட்டம் சுமார் 15,000 கோடி ரூபாய் மதிப்பில் அடுத்த மாதம் செயல் படுத்தப்படும் என்று அறிவிப்புச் செய்த நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மற்றும் தமிழகத்தில் வாழுகின்ற ஒரு கோடியே இருபத்தி ஐந்து இலட்சம் விஸ்வகர்மாக்களின் அன்பு கலந்த நன்றி○○○ நன்றி○○○ நன்றி○○○
சமீபத்தில் டெல்லி சென்ற நமது ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள் விஸ்வகர்மா சமுதாயத்தினுடைய பாரம்பரிய தன்மையை பற்றி மத்திய அமைச்சர்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜி பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டாஜி அவர்களை சந்தித்து சமூகத்தைபாரம்பரிய கலைத்திறனை பற்றி பற்றி எடுத்துரைத்தது இந்த சமயத்தில் குறிப்பிடத்தக்கது
ஐந்தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லி அதற்கான முயற்சியில் இது வரை யாரும் ஈடுபடவில்லை. நமது விஸ்வகர்மா ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சாமிகள்டெல்லியில் மூன்று நாட்கள் முகாமிட்டு பாரதப் பிரதமரின் செவிகளுக்கு விஸ்வகர்மா சமுதாயத்தின் கலைத்திறனை பற்றிய அனைத்து விஷயங்களும் கொண்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது..பிரதமரின் கருணை உள்ளம் நமது சமூகத்தின் அருமைப் பெருமைகளை புரிந்துக் கொண்டு விஸ்வகர்மா க்களின் வாழ்வாதார நிலைமையை யறிந்து
தானாக அக்கரைக் கொண்டு சலுகைகள் செய்ய முன் வருகிறார். இதுவரையில் எந்த ஒரு பிரதமரும் செய்யவும் இல்லை நமது சமூகத்தை கண்டுக் கொண்டதும் இல்லை ! எனவே மீண்டும் நரேந்திர மோடிஜி அவர்களே மீண்டும் பிரதமராக வந்து இது போன்ற நற்ச் செயல்கள் செய்து விஸ்வகுலத்துக்கு நல்ல விடிவு காலம் பிறக்க நல் வகைச் செய்ய வேண்டும் என எல்லாம் வல்ல
*ஸ்ரீ விஸ்வப்ரம்ம பகவான் ஸ்ரீ காயத்திரி தேவியை* வணங்கி பிராத்திப்போம் !!
ஜெய் ” விஸ்வகர்மா ”
வாழ்க”விஸ்வகுலம்”
இந்து மதத்தின் ஆணிவேர்…….. விஸ்வகர்மாக்கள்……….
ஆன்மீகத்தின் ஆதி அடையாளம்
விஸ்வகர்மாக்கள்…….
உழைப் போம் ……………….
ஒற்றுமைக் காப்போம்……………
அதிகாரத்தைப் பெறுவோம்….அகில இந்திய விஸ்வகர்மா கூட்டமைப்பு…..
இந்தியா நியூஸ் செய்தியாளர்: T. சுப்பிரமணி