Connect with us

Political News

கேரளாவில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு !

கேரளாவில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு !

 

கேரளாவில் நவம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரளாவில் அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் மக்கள் பெரும் அச்சம் அடைந்தனர். இந்தியாவில் ஏற்படும் தினசரி பாதிப்பில் சுமார் 60 சதவிகிதம் கேரளாவில் பதிவானது. இதனால் கேரள அரசு பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது. கேரளாவில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

 

பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் உயர்மட்ட கொரோனா ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தின் முடிவில் 1 முதல் 7ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளை நவம்பர் 1ஆம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற வகுப்புகளை நவம்பர் 15ஆம் தேதி திறக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். அடுத்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறக்க முடிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ நிபுணர்களும் முதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகளை திறந்த உடன் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கருத்துகளை தெரிவித்துள்ளனர். பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக்கல்வி துறை இணைந்து மேற்கொண்டு வருகின்றன

Continue Reading

Entertainment

Watch Latest Movies

Watch latest movies online and explore the best of Bollywood movies, Hollywood movies and Regional Cinema

Continue Reading

Political News

பாகிஸ்தான் பயணம் ரத்து: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தானுக்கு மேற்கொள்ளவிருந்த ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியின் பயணத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திங்கள்கிழமை ரத்து செய்தது.

இங்கிலாந்து ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்ளவிருந்தன. அக்டோபர் 13 மற்றும் 14-ம் தேதி ராவல்பிண்டியில் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. இங்கிலாந்து மகளிர் அணி டி20 தொடரைத் தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவிருந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி போட்டி தொடங்குவதற்கு சற்று முன்னதாக கடைசி நேரத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் காரணம் காட்டி பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.இந்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்திருப்பது அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கும், வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளிக்கவுள்ளது.

Continue Reading

Political News

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் செப். 24-இல் சந்திப்பு: வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 24-ம் தேதி சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை திங்கள்கிழமை அறிவித்தது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செப்டம்பர் 24-ம் தேதி நடைபெறவுள்ள ‘க்வாட்’ அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இந்த வாரம் அமெரிக்க புறப்படுகிறார்.
இதில் பங்கேற்கச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸனுடன் தனிப்பட்ட முறையில் பேச்சு நடத்துவார் என முன்பு தகவல்கள் வெளியாகின.இந்த நிலையில் வெள்ளை மாளிகை இதனை உறுதிபடுத்தியுள்ளது.

இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோரை அமெரிக்க அதிபர் பைடன் சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement

Trending

Copyright © 2021 Tamil Wire