நல்லதங்காள் ஓடை நீர்தேக்க அனைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் தொடர்ந்து ஆறாவது நாளாக காத்திருப்பு போராட்டம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதாங்கால் நீர்த்தேக்க அணை கட்டுமான பணிக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி 6-வது நாளாக கோனரிபட்டியில் இரவு பகலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 6வது நாளான இன்று நல்லதங்காள் ஓடை அணையில் 50,க்கும் மேற்பட்ட விவசாயிகள் அணையின் உள்ளே இறங்கி தமிழக அரசு மற்றும் பொதுப்பினை துறை அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில்
என்னாச்சு என்னாச்சு விவசாயிகள் இடத்தில் நிலம் வாங்கினையே என்னாச்சு கொடுத்தையா கொடுத்தையா நிலம் வாங்கிய விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதி கொடுத்தயே இழப்பீடு தருகிறேன் என்று சொன்னாயே 23 வருடமாகியும் இழப்பீடு தராமல் தமிழக அரசே,
அப்பாவி விவசாயிகளை ஏமாத்திரையே கேக்கலையா விவசாயிகளின் அழுகுரல் கேட்கலையா 23 வருடமாக தமிழக அரசுக்கு கேட்கலையா? என கோசமிட்டு விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து விவசாயி பாலசுப்பிரமணியன் தெரிவிக்கையில்:-
பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதங்காள் ஓடை நீர்தேக்க அனைக்கு கட்டுமான பணிக்காக 150 விவசாயிகளிடமிருந்து 750 ஏக்கர் நிலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 1997-ம் ஆண்டு கையகப்படுத்தி 2000-ம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர். அப்போது விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் கொடுத்த விவசாயிகள் உரிய இழப்பீட்டுத் தொகை கேட்டு 2003-ம் ஆண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். நீதிமன்றம் தீர்ப்பு வந்தும் தாராபுரம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு 23 ஆண்டுகளாக இழப்பீட்டுத் தொகை வழங்காமல் விவசாயிகளை ஏமாற்றி வருவதாக தெரிவித்தார். அன்றைய திமுக அரசும் தற்போது செய்தித் துறை அமைச்சராக உள்ள சாமிநாதன் மற்றும் முன்னாள் பழனி பாராளுமன்ற எம்பி ஆக இருந்த எஸ்கே. கார்வேந்தன் ஆகியோர் அணைக்கட்ட நிலம் கொடுங்கள் என சொன்னதால் நிலம் கொடுத்தோம் ஆனால் 23 ஆண்டுகள் கடந்தும் விவசாயிகளிடம் வாங்கிய நிலத்திற்கு அரசு இழப்பீடு வழங்கவில்லை இழப்பீடு கிடைக்கும் வரை சாகும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் இருப்போம் என இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்: T. சுப்பிரமணி