கோபிசெட்டிபாளையம்:
எத்தியோப்பியா நாட்டிலிருந்து கோபி பகுதிக்கு வந்திருந்த அந்நாட்டின் வேளாண்மைத்துறை அமைச்சர் தலைமையிலான குழுவினரை பாரம்பரிய முறையில் கலாச்சார நடனமாடி வரவேற்ற பழங்குடியின கலைக்குழுவினர்…
கோபி மற்றும் நம்பியூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள வேளாண்மை அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வினை மேற்கொள்ள ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியா நாட்டின் வேளாண் துறை அமைச்சர் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் தமிழகத்திற்கு சுற்றுப்பயணம்
வந்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக கோபிசெட்டிபாளையம் வேளாண் அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ள கோபி பகுதிக்கு வருகை புரிந்த எத்தியோப்பியா நாட்டின் வேளாண்மை துறை அமைச்சர் மேல்ஸ் மேக்கோனன் இம்மர் மற்றும் அவருடன் வந்திருந்த அதிகாரிகள் குழுவினரை
சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூர் வனப்பகுதியை சேர்ந்த பழங்குடியின இசைக்கலைஞர்கள் பாரம்பரிய இசை வாத்தியங்களை வாசித்தும் நடனமாடியும் வரவேற்றனர்.
உலகின் தொன்மையான நாகரீக மிகுந்த மக்கள் அதிகம் வாழும் எத்தியோப்பிய நாட்டினர்
நமது சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த பழங்குடியின குழுவினரின் வாத்திய இசையை கேட்டு ரசித்து அவர்களுடன் இணைந்து ஆனந்தமாக நடனமாடினர்.
அதனைதொடர்ந்து கோபிசெட்டிபாளையம் மற்றும் நம்பியூர் பகுதிகளில் அமைந்துள்ள வேளாண் விரிவாக்க மையங்களின் செயல்பாடுகள் குறித்தும் வேளாண்மை துறையில் உழவர்கள் பயன்படுத்தும் புதிய தொழில் நுட்பங்கள் குறித்தும் எத்தியோப்பிய அமைச்சர் தலைமையில் வந்திருந்த குழுவினருக்கு கோபி வேளாண் அறிவியல் நிலையத்தை சேர்ந்த விஞ்ஞானியும் முனைவருமான அழகேசன் எடுத்துரைத்தார்.
செய்தி ஆசிரியர் ராம் சந்திரன்