Connect with us

Political News

ஒன்றிய அரசின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரூ. 26 ஆயிரம் கோடி கடன் பத்திரங்கள் ஏலம்!

மத்திய அரசின் நிதி பற்றாக்குறை நடப்பு நிதி ஆண்டில் 15 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் கடன் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் நிதி பற்றாக்குறை ஈடு செய்யப்படுகிறது. 26 ஆயிரம் கோடி ரூபாயை விட அதிகமாக விருப்ப மனுக்கள் குவிந்தால் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் கூடுதலாக கடன் பத்திரங்கள் வெளியிடப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதன்படி 2023-ம் ஆண்டு மே 17-ந் தேதி முதிர்ச்சி அடையும் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய கடன் பத்திரங்களுக்கு 4.26 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது.

2031-ம் ஆண்டு ஜூலை 12-ந் தேதி முதிர்ச்சி அடையும் 44 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய கடன் பத்திரங்களுக்கு 6.10 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது.

அதே போல் 2061-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந் தேதி முதிர்ச்சி அடையும் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய கடன் பத்திரங்களுக்கு 6.76 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது.

Continue Reading

Entertainment

Watch Latest Movies

Watch latest movies online and explore the best of Bollywood movies, Hollywood movies and Regional Cinema

Continue Reading

Political News

பாகிஸ்தான் பயணம் ரத்து: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தானுக்கு மேற்கொள்ளவிருந்த ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியின் பயணத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திங்கள்கிழமை ரத்து செய்தது.

இங்கிலாந்து ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்ளவிருந்தன. அக்டோபர் 13 மற்றும் 14-ம் தேதி ராவல்பிண்டியில் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. இங்கிலாந்து மகளிர் அணி டி20 தொடரைத் தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவிருந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி போட்டி தொடங்குவதற்கு சற்று முன்னதாக கடைசி நேரத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் காரணம் காட்டி பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.இந்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்திருப்பது அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கும், வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளிக்கவுள்ளது.

Continue Reading

Political News

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் செப். 24-இல் சந்திப்பு: வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 24-ம் தேதி சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை திங்கள்கிழமை அறிவித்தது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செப்டம்பர் 24-ம் தேதி நடைபெறவுள்ள ‘க்வாட்’ அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இந்த வாரம் அமெரிக்க புறப்படுகிறார்.
இதில் பங்கேற்கச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸனுடன் தனிப்பட்ட முறையில் பேச்சு நடத்துவார் என முன்பு தகவல்கள் வெளியாகின.இந்த நிலையில் வெள்ளை மாளிகை இதனை உறுதிபடுத்தியுள்ளது.

இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோரை அமெரிக்க அதிபர் பைடன் சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement

Trending

Copyright © 2021 Tamil Wire