அந்தியூரில் நள்ளிரவில் பூட்டை உடைத்து 4 கடைகளில் சுமார் 25 ஆயிரம் ரொக்கம் திருட்டு..
மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு..
ஈரோடு மாவட்டம் அந்தியூர், பேருந்து நிலையம் அருகே அந்தியூர் -பவானி சாலையில் உள்ள பேக்கரி கடை, ஆட்டோ மொபைல்ஸ் கடை மற்றும் அண்ணா மடுவு பகுதியில் உள்ள மளிகை கடை, எலக்ட்ரிக்ல் கடை என நான்கு கடைகளில் நள்ளிரவில் பைக்கில் வந்த இரண்டு மர்ம ஆசாமிகள் ஹெல்மெட் அணிந்து கொண்டு கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 4 கடைகளிலும் சேர்த்து சுமார் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடி சென்றுள்ளனர்.
தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்ததில் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது, தொடர்ந்து அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில் அந்தியூர் பகுதியில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்
இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி இரவு நேரங்களில் ஆங்காங்கே வாகன சோதனைகள் நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
அந்தியூர் அண்ணா மடுவு பகுதியில் தொடர்ந்து நான்கு கடைகளில் திருட்டுப் போன சம்பவம் அப்பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : T.சுப்ரமணி