*அந்தியூர் அருகே காட்டுக்கொட்டை விதைகளை சாப்பிட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி குழந்தைகளை பாமகவினர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நத்தமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 5,6,7 மற்றும் 8-வது வகுப்பு வரை மயிலும் 19 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை என 20 பேர் 16.ந்தேதி மாலை பள்ளி அருகே இருந்த காட்டுக்கொட்டையை (ஆமணக்கு வகையை சார்ந்தது) இனிப்பாக இருந்ததன் காரணமாக எடுத்து சாப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்து பள்ளியை விட்டு வீட்டிற்கு வந்து அன்று இரவு சுமார் 9 மணி அளவில் ஒவ்வொரு குழந்தைக்கு வாந்தி மற்றும் பேதி எடுத்துள்ளது , தொடர்ந்து அனைத்து குழந்தைகளும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அதில் 14 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்..
தொடர்ந்து அனைத்து குழந்தைகளும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்,
இதனைத் தொடர்ந்து அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை பாட்டாளி மக்கள் கட்சி ஈரோடு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட இளைஞர் சங்கத் தலைவர் முனுசாமி மாவட்ட மாணவர் அணி செயலாளர் விஜய வர்மன் மாவட்ட துணை தலைவர் கார்த்தி மாவட்ட அமைப்பு செயலாளர் சனிச்சந்தை சண்முகம் முன்னாள் இளைஞர் சங்கச் செயலாளர் திருமுருகன் அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய தலைவர் கோவிந்தராஜ் அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் லோகு அந்தியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கராசு பாட்டாளி தொழிற்சங்கம் சேகர் அந்தியூர் நகரத் தலைவர் பாலன் அந்தியூர் தெற்கு ஒன்றிய தலைவர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு ரொட்டி பிஸ்கட் ஆகியவைகளை வழங்கி நலம் விசாரித்தனர்.
செய்தியாளர்: T.சுப்பிரமணி