Connect with us

Recent Updates

நீட்டை ரத்து செய்தால் சமூகநீதி நிலைநாட்டப்படும்..’ ஏகே ராஜன் குழு அறிக்கை

நீட் ரத்துக்கு சட்டம் இயற்றுவதன் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் சமூக நீதி உறுதி செய்யப்படும்

நீட் ரத்துக்கு சட்டம் இயற்றுவதன் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் சமூக நீதி உறுதி செய்யப்படும்

நீட் தாக்கம் குறித்து ஆராய்ந்து ஏ.கே.ராஜன் குழு தமிழக அரசுக்கு அளித்த அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நீட் தேர்வைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கையை எடுக்கத் தொடங்கலாம் என ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைத்துள்ளது.

165 பக்க அறிக்கை சுமார் 85,000 பேரிடம் கருத்துக் கேட்கப்பட்டு, இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. 160க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் இதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. மேலும், நீட்டிற்கு முன் மற்றும் நீட்டிற்கு பிறகு உள்ள மாணவர் சேர்க்கை குறித்த தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்
நீட் ரத்துக்கு சட்டம் இயற்றுவதன் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் சமூக நீதி உறுதி செய்யப்படும்

இந்த அறிக்கையின் 9ஆவது பகுதியில் தமிழ்நாடு அரசுக்கு ஏழு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளது. அதில் நீட் தேர்வை ரத்து செய்யத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீட் தேர்வை ரத்து செய்யத் தனிச் சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. நீட் ரத்துக்கு சட்டம் இயற்றுவதன் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் சமூக நீதி உறுதி செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading

Entertainment

Watch Latest Movies

Watch latest movies online and explore the best of Bollywood movies, Hollywood movies and Regional Cinema

Continue Reading

Recent Updates

தமிழகத்தில் 1,661- பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் 1,661- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று உறுதி  செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 47 ஆயிரத்து 041- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,623- ஆக உள்ளது.
தொற்று பாதிப்பால் இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 23 ஆக  உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 16,984- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35,360- ஆக உயர்ந்துள்ளது

இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 16,984.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 4,45,51,169.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,52,493.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 26,47,041.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,661.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 206.

* சென்னையில் இன்று சிகிச்சையில் பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 2043.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 15,45,237 பேர். பெண்கள் 11,01,766 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 925 பேர். பெண்கள் 736 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,623 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 25,94,697 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 23 பேர் உயிரிழந்தனர். 5 பேர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவராவார், 18 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 35,360 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 8449 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 22 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் 1 பேர்.

இன்று மாநிலம் முழுவதும் 40629 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 25016 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 8139 ​​​​​​​ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் ஒருவருக்கும் தொற்று இல்லை. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து பேர் 55,05,353 வந்துள்ளனர்.

சென்னையில் 204 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 1,455 பேருக்குத் தொற்று உள்ளது.

* தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 229 தனியார் ஆய்வகங்கள் என 298 ஆய்வகங்கள் உள்ளன.

 

Continue Reading

Political News

அடுத்த மாதம் மீண்டும் தொடங்கும் வேக்சின் ஏற்றுமதி

இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “இந்த புதுப்பிக்கப்பட்ட ஏற்றுமதி முறை ‘தடுப்பூசி மைத்திரி’ என அழைக்கப்படும்.

உலகில் எந்தவொரு நாட்டிலும் கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் சில நாடுகள் வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

முன்னதாக இலங்கை, நேபாளம், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளுக்கு இந்தியா அன்பளிப்பாக வேக்சினை்களை அளித்தது. அதேபோல தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கு வணிக ரீதியிலும் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்தச் சூழலில் தான் 2ஆம் அலை ஏற்பட்டு வேக்சின் பற்றாக்குறை மோசமாக இருந்தது. இந்தியர்களுக்கு முதலில் வேக்சின் அளிக்காமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமித செய்வது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்போது வேக்சின் ஏற்றுமதி மற்றும் அன்பளிப்பாக வழங்கும் நடைமுறை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டன. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், பின்னர் அது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. கடந்த மே மாதம் முதல் இந்தியாவில் 18+ அனைவருக்கும் வேக்சின் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இருப்பினும், தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கொரோனா வேக்சின் உற்பத்தி இல்லை.
மேலும், கொரோனா வேக்சின் உற்பத்தியை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் கொரோனா வேக்சின் செலுத்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தற்போது வேக்சின் உற்பத்தியில் இருந்து சிக்கல்களும் நீங்கியுள்ளதால், தடுப்பூசி போடும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தச் சூழலில் அடுத்த மாதம் முதல் கொரோனா வேக்சின்களை அன்பளிப்பாக வழங்குவதும் ஏற்றுமதியும் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி நாளை (செப். 21) அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா தலைவர்கள் கலந்துகொள்ளும் இந்த குவாட் மாநாட்டில் தடுப்பூசிகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “இந்த புதுப்பிக்கப்பட்ட ஏற்றுமதி முறை ‘தடுப்பூசி மைத்திரி’ என அழைக்கப்படும். உலகளாவிய தடுப்பூசி பகிர்வு தளமான கோவாக்ஸ் திட்டத்திற்கு இது உதவும். மேலும் அண்டை நாடுகளுக்கு இதன் மூலம் நம்மால் முன்னுரிமை அளிக்க முடியும். கடந்த ஏப்ரல் மாதம் முதலே இந்தியாவில் வேக்சின் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்த மாதம் முதல் 30 கோடி வேகே்சின்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். பயாலஜிக்கல் இ போன்ற நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டின் கடைசி 3 மாதங்களில் 100 கோடி வேக்சின் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
மற்ற நாடுகளுக்கு கொரோனா வேக்சின் போதியளவு கிடைப்பதை உறுதி செய்ய கோவாக்ஸ் திட்டத்திற்கு வேக்சின் அளிப்போம். அதேநேரம் முதலில் அண்டை நாடுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். அதேநேரம் இந்தியர்களின் தேவை போக அதிகப்படியாக உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படும்” என்று அவர் தெரிவித்தார். தடுப்பூசி ஏற்றுமதியைத் தடை செய்யும் முன் இந்தியா 100 நாடுகளுக்கு சுமார் 6.6 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது

Continue Reading
Advertisement

Trending

Copyright © 2021 Tamil Wire