ஈரோடு மாவட்டம்: செய்தியாளர் திரு.ராம் சந்திரன்
சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் தொடர்ந்து விவசாய பயிர்களுக்கு சேதம் விளைவித்து வரும் யானைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட வன அலுவலரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் கடம்பூர் வனச்சகத்திற்குட்பட்ட மூலக்கடம்பூர்,நடூர் ,கொளுஞ்சி,மாத்தூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் வனப்பகுதியின் அருகாமையில் உள்ளது.
இந்த கிராமத்தை சேர்ந்த 500 ககும் மேற்பட்ட விவசாயிகள் அவர்களின் நிலங்களில் கம்பு, ராகி ,சோளம் மரவள்ளி போன்ற பயிர்களை பயிரிட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கிராமங்களுக்கு அருகாமையில் உள்ள வனப் பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள் அங்குள்ள விவசாயிகளின் விளை நிலங்களுக்குள் பகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால்
இப்பகுதி விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
எனவே தொடர்ந்து விவசாய நிலங்களுக்குள் யானை பகுவதை தடுத்து நிறுத்த வனப்குதியை ஒட்டியுள்ள பகுதியில் அகழி ஏற்படுத்தியும், குறைந்த அழுத்தம் கொண்ட மின் வேலியினை அமைத்து தருமாறும் கடம்பூர் பகுதியை சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கடம்பூர் ராமசாமியின் தலைமையில் சத்தியமங்கலத்தில் உள்ள மாவட்ட வன அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
செய்தியாளர் திரு.ராம் சந்திரன்