Connect with us

Health

முகவாதம் என்றால் என்ன? அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை

mugavaatham

 

முகவாதம் என்றால் என்ன?

 நம் உடலில்  மூளை நரம்புகள் என்ற வகையில்  12 நரம்புகள் உள்ளன, அதில்  7 ஆவதாக இருக்கும் நரம்பு  தான் முக நரம்பு  எனப்படும். இது  மூளையில்  இருந்து காது  வழியாக நீடித்து  முகத்தின் தசைகளை செயல்படுத்த உதவும்.  இந்த நரம்பில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அது முகத்தின் ஒரு பக்கத்தில் உள்ள முக தசைகளை பலவீனமாக்கி  செயல் இழக்க வைக்கும். இதை  முகவாதம் என்பார்கள்.

 இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 1,00,000 பேரில்  20-30 பேர்  இந்த  முகவாதம் பிரச்சினையினால்  பாதிக்கப்படுகிறார்கள்.

 

யாருக்கு முகவாதம் வரலாம் ?

  இது  15-45 வயதை உடையவர்களுக்கு வரலாம், குடும்பத்தில் வேறு  ஒருவருக்கு முகவாதம் இருந்தாலும் இந்த பிரச்சனை வரக்கூடும்.

 

முகவாதம் வருவதற்கான காரணங்கள்:

 •  வைரஸ் தொற்று- இதில் முக்கியமாக ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் நுண்கிருமி 1 (Herpes simplex 1 or HSV-1) , இந்த வைரஸ் நரம்புகளில் தொற்றை உண்டாக்கி அங்கு இருக்கும் ரத்த ஓட்டத்தை பாதித்து வீக்கத்தை (swelling) ஏற்படுத்தும். அப்போது நரம்பின் செயல்பாடு நின்று முகவாதம் வரக்கூடும் .
 •  நோய் எதிர்ப்பு சம்மந்தமான பிரச்சனை உள்ளவர்கள்

 

மேலும் , இந்த முகவாதம் வருவதற்கான முக்கியமான காரணங்கள் இன்னும் தெளிவாக கண்டுபிடிக்கப்படவில்லை.

 

முகவாதம் அறிகுறிகள்:

 

 • கண்களை மூட முடியாமல் போவது.
 • பேசுவதில் சிரமம் ஏற்படுவது.
 • முகத்தின் சமநிலை பாதிக்கப்படும், ஒரு பக்கம் கோணியபடி  காட்சியளிக்கும்.
 • புருவங்களை அசைக்க முடியாது.
 • வாய் கீழே தொங்குவது.
 • காது கேட்காமல் போவது.
 • உணவு உண்பதில் சிரமம் ஏற்படுவது.
 • குரலில் கரகரப்பு வருவது.
 • கண்களில் தொடர்ந்து நீர் வடியும்.
 • கழுத்து, கண்ணம் மற்றும் பல் இருக்கும் இடங்களில் கடுமையாக வலி வரக்கூடும்.

 

முகத்தின் அடிப்படை செயல்கள் இழப்பதினால் கடுமையான வலியுடன், முகம் உணர்ச்சி இல்லாததுபோல் காட்சி அளிக்கக்கூடும். இதனால் சமூகத்தில் பிறருடன் சாதாரணமான  தொடர்பு வைத்துக்கொள்வதே சிரமாகும்.

 

எனவே இது முகவாதம் உள்ள நோயாளிகள் இடையே பெரும் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கக்கூடும் மற்றும் சிலர் மன  உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள்.

 

மருத்துவரின் ஆலோசனை:

 இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் காலம்தாழ்த்தாமல் மருத்துவரின்  ஆலோசனை பெறுவது நல்லது. உலகில் முகவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் 85% பேர் மூன்று  வாரங்களில் குணம் அடைகிறார்கள்.  எனவே முகவாதம் வந்தவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் மன உறுதியுடன் இருக்க வேண்டும்.

பரிசோதனை:

CBC, MRI, Electro Diagnostic டெஸ்ட் மற்றும் சில பரிசோதனைகளின் மூலம் முகவாதம் மற்றும் அதன் பாதிப்பின் தன்மையை கண்டறியலாம்.

 முகவாதம் சிகிச்சை:

 Drug remedy (corticosteroids remedy and antiviral drug remedy), 70% பேர் இதன் மூலம் குணம் அடைகிறார்கள்.

 • Electrical Stimulation மூலம் முகவாதம் சீக்கிரம் குணமடைய உதவும்.
 • Facial Exercise
 • அறுவை சிகிச்சை மூலமாக கூட முகவாதம் இந்த காலத்தில் சரி செய்யலாம்.

 

சிகிச்சை எடுப்பதில் அலட்சியம் காட்டினால் ஒரு பக்கத்தில் மட்டும்  வரும் இந்த முக வாதம் இன்னொரு முக பாகத்திற்கும் பரவிவிடும். 

முகவாதம் இருப்பவர்கள் நல்ல எண்ணங்களுடன், தைரியமாக, அச்சமின்றி மருத்துவர் ஆலோசனை பின்பற்றினால் சீக்கிரமாக குணமடையலாம் .

 

 

Continue Reading

Health

ஆகஸ்ட் இறுதிக்குள் 3 வது அலை, தினமும் 1 லட்சம் கோவிட் நோயாளிகள் : ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் எச்சரிக்கை:

ஆகஸ்ட் இறுதிக்குள் 3 வது அலை, தினமும் 1 லட்சம் கோவிட் நோயாளிகள் : ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் எச்சரிக்கை:

 

ஆகஸ்ட் இறுதிக்குள் 3 வது அலை, தினமும் 1 லட்சம் கோவிட் நோயாளிகள் : ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் எச்சரிக்கை:

பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் திரண்டு வருவதால், மோசமான காலகட்டத்தை கடந்துவிட்டதாகத் தோன்றலாம். இருப்பினும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) முன்னணி விஞ்ஞானி மற்றும் பேராசிரியர் சமிரான் பாண்டா, “COVID-19 இன் மூன்றாவது அலை ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியாவுக்கு வரும் என்று கணித்துள்ளார், ஒவ்வொரு நாளும் சுமார் 1 லட்சம் கோவிட் நோயாளிகள் அட்மிட் செய்யப்படலாம்” என்று தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் பாண்டா, மூன்றாவது அலையின் தீவிரத்தைப் பற்றி பேசுகையில், வைரஸ் மேலும் உருமாறாவிட்டால், இது முதல் அலைக்கு ஒத்ததாக இருக்கும் என்று இந்தியா டுடே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது மறுபடி உருமாற்றம் அடைந்தால் , விஷயங்கள் மிகவும் மோசமாகிவிடும்.

மூன்றாவது அலை இந்தியாவில் இரண்டாவது அலை போல பேரழிவை ஏற்படுத்தாது என்றாலும், குறைந்த தடுப்பூசி வீதமும் கட்டுப்பாடுகளை தளர்த்துவதும் நோயாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று பாண்டா கருதுகிறார்.

“தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும்போது, ​​மூன்றாவது அலை இருக்கும் என்று ஒருவர் கருதலாம்” என்றும் “வெகுஜன கூட்டங்களைத் தவிர்ப்பது, முகமூடிகளை அணிவது போன்றவற்றின் மூலம் நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த உதவும்” என்று அவர் மேலும் கூறினார்.

நோய்த்தொற்றுகளை ஆய்வு செய்த ஒரு ஐ.சி.எம்.ஆர் ஆராய்ச்சியை அவர் மேற்கோள் காட்டினார், அவற்றில் 86 சதவீதம் டெல்டா மாறுபாட்டால் ஏற்பட்டவை என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

பேராசிரியர் பாண்டாவுடன், என்.ஐ.டி.ஐ. ஆயோக்கின் டாக்டர் வி.கே.பாலும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார், அடுத்த 100-125 நாட்கள் COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் முக்கியமானவை.

குறிப்பு: பேராசிரியர் பாண்டா ஐ.சி.எம்.ஆரின் தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்கள் பிரிவின் இயக்குநராக உள்ளார்.

Continue Reading

Health

கொரோனா 3-வது அலை – இந்திய மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை

கொரோனா 3-வது அலை

கொரோனா 3-வது அலை எந்த நேரத்திலும் தாக்கலாம் என இந்திய மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவின் உயர்மட்ட மருத்துவர்கள் அமைப்பான இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) இன்று மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோவிட் மூன்றாம் அலை குறித்து அஜாக்கிரதை வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தது. இந்த முக்கியமான கட்டத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் காட்டிய அலட்சியம் குறித்து அது வேதனையை வெளிப்படுத்தியது.

உலக நாடுகளில் கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கிவிட்டது. இங்கிலாந்து, ரஷ்யா, கொலம்பியா, பிரேசிலில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான் கொரோனா 3-வது அலை இந்தியாவை எந்த நேரத்திலும் தாக்கக் கூடும் என இந்திய மருத்துவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுற்றுலா தலங்கள், யாத்திரைகள் ஆகியவற்றுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டாம் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்தகால வரலாறுகள் மற்றும் தொற்றுநோய்களின் வரலாற்றையும் கொண்டு, மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது.எந்த நேரத்திலும் கொரோனா 3-வது அலை இந்தியாவையும் தாக்கக் கூடும். இப்படியான சூழ்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கொரோனா கால கட்டுப்பாடுகளை மீறி பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

“நாட்டின் பல பகுதிகளில் அரசாங்கமும் பொதுமக்களும் நெறிமுறைகளைப் பின்பற்றாமல் கூட்டமாக சுற்றுலா தளங்களிலும் ,வழிபட்டுத்தலங்களிலும் கூடுவது வேதனையளிப்பதாக “ஐஎம்ஏ செய்திக்குறிப்பு இன்று தெரிவித்துள்ளது.

சுற்றுலாக்கள், யாத்திரைகள் என்பது எல்லாம் மக்களுக்கு அவசியமானதுதான். ஆனால் இன்னும் சில மாதங்கள் கூட்டமாக கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளாமல் மக்கள் இப்படியான ஒன்று கூடல்களுக்கு அனுமதித்தால் கொரோனா 3-வது அலை அதிவேகமாக பரவ இவையே காரணமாகிவிடும். கடந்த ஒன்றரை ஆண்டுகால படிப்பினைகள் மூலம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது, கொரோனாவை தடுக்கும் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுவது ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு இந்திய மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.

Continue Reading

Health

ட்ரைஜீமினல் நரம்பு வலி (முக்கிளை நரம்புவலி) என்றால் என்ன?-Trigeminal Neuralgia

முக்கிளை நரம்புவலி

ட்ரைஜீமினல் நரம்பு வலி (முக்கிளை நரம்புவலி) என்றால் என்ன?- Trigeminal Neuralgia

தலையில் உள்ள 12 மூளை நரம்புகளில் ஐந்தாவதாக இருப்பது தான்  ட்ரிஜெர்மினல்  நரம்பு அல்லது முக்கிளை நரம்பு. இந்த நரம்பு 3 கிளைகளாக பிரிந்து உட்சந்தலை முதல் தொண்டை வரை இருக்கும்  எல்லா பகுதிகளையும் சீராக செயல்பட உதவும். இந்த முக்கிளை  நரம்பில் பிரச்சினை ஏற்பட்டால் அது ட்ரிஜெர்மினல் நரம்பு  வலியை  உண்டாக்கும் .

ஏன் இதை தற்கொலை நோய் என்று அழைக்கிறார்கள் ?

ட்ரிஜெர்மினல் / முக்கிளை  நரம்பின் கிளைகள்,  விரிவடைந்து செயல்பட செய்யும்  எல்லா பகுதிகளிலும்  மிகவும்  கடுமையான  மின்சாரம் தாக்கியதுபோல் வலியை உண்டாக்கும். இதில் பாதிக்கப்படும் நோயாளிகள் மனநிலை தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள் எனவே காலப்போக்கில் அது  தற்கொலையில்  முடியலாம்.

 

யாருக்கு ட்ரிஜெர்மினல்  நரம்பு வலி  வரலாம் ?

இந்தியாவில்  1,00,000  பேரில் வெறும்  4-5 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

 • 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு ட்ரிஜெர்மினல் நரம்பு வலி வரலாம்.
 • பெரும்பாலும் ஆண்களை விட பெண்கள் 60% அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

 

ட்ரிஜெர்மினல் நரம்பு வலி வருவதற்கான காரணங்கள்  என்ன?

 • ட்ரிஜெர்மினல் நரம்பைச்சுற்றி இருக்கும் ரத்த தளத்தில் சில சமயம் விரிவாக்கம் அடைந்தாலோ அல்லது அதில் கொழுப்பு படிவு அடைந்தாலோ அங்கு ட்ரிஜெர்மினல் நரம்பில் அழுத்தம் ஏற்பட்டு ட்ரிஜெர்மினல் நரம்பு வலி  வரக்கூடும்.
 • நரம்பின் பக்கம் வளரும் கட்டிகள் , நரம்பின் கிளையினுள் அழுத்தத்தை உண்டாக்கினாலும் இந்த நிலை  உருவாகலாம்.

 

ட்ரிஜெர்மினல் நரம்புவலியின் அறிகுறி என்ன?

 • திடீரென சில நொடிகளில் இருந்து நிமிடங்களுக்கு ஊசி குத்துவது மற்றும் சுடுவதுபோல் வலி ஏற்படும்.
 • இந்த வலி ஒரு நாள் அல்லது வாரத்திற்கு பலமுறை வரலாம்.
 • பெரும்பாலும் முகத்தின் ஒரு பக்கம் மட்டும் பாதிக்கக்கூடும்.
 • பேசும்போது, முகம் கழுவும்போது, உணவு உண்ணும்போது, முகம் தொடும்போது, தண்ணீர் குடிக்கும்போது, பல் விலகும்போது, சிரிக்கும்போது அல்லது வேகமாக காற்று முகத்தில் வீசும்போதும் இது  போல பல தினசரி செயல்களை செய்யும்போது கடுமையான வலி  ஏற்படும்.

 

மருத்துவரின் ஆலோசனை

இது  75-80% குணப்படுத்தக்கூடிய நோய் ஆகும். குணப்படுத்த பல வாரங்கள் அல்லது சில மாசங்கள் ஆகலாம்.நேரம் தாமதிக்காமல் மருத்துவரின் ஆலோசனைபெறுவது சிறந்தது.

நரம்பு மற்றும் உடல் பரிசோதனை, CBC,MRI scan மற்றும் சில பரிசோதனைகளின் மூலம்  காரணகங்களை கண்டறிந்து மருத்துவர்  நோயின் பாதிப்பு நிலைமையை  அறிந்து, அதற்கேற்ப சிகிட்சையை வழங்குவார்.

 

ட்ரிஜெர்மினல் நரம்பு வலி சிகிச்சை:

 • மருத்துவ சிகிச்சை (anticonvulsant drugs, Muscle relaxants)
 • அறுவை சிகிட்சை (Gamma knife radio surgery, Micro vascular decompression)

Continue Reading
Advertisement

Trending

Copyright © 2021 Tamil Wire.

error: Alert: Content is protected !!