ஈரோடு மாவட்டம்.
செய்தியாளர் திரு.ராம் சந்திரன்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரிய கொடிவேரி பகுதியின் பவானி ஆற்றில்
தமிழ் நாடு அரசின் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 80 ஆயிரம் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாராமாக விளங்கும் பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் மீன் பிடிப்பதை முக்கிய தொழிலாக கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவ்வாறு மீன் பிடிக்கும் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வரும் மீனவர்களுக்கு தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பிலும் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டு திட்டத்தின் மூலமாகவும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பெரிய கொடிவேரியை அடுத்துள்ள பவானி ஆற்றில் மீன் உறபத்தியை பெருக்கும் நோக்கத்தில் 80 ஆயிரம் நாட்டின மீன் குஞ்சுகளை இருப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் பவானிசாகர் மண்டல துணை இயக்குனர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கொடிவேரி பகுதியை சேர்ந்த மீனவர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் பவானி ஆறு மற்றும் கொடிவேரி அனை ஆகிய பகுதிகளில் கல்பாசு,கட்லா,ரோகுமிருகால் போன்ற இனங்களை சேர்ந்த ஒரு 80 ஆயிரம் மீன்
குஞ்சுகளை இருப்பு செய்வதற்காக ஆற்றில் விடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மண்டல துணை இயக்குனர்,பவானிசாகர் மற்றும் ஈரோடு பகுதியின் உதவி இயக்குனர்கள் கோபி மற்றும் புங்கார் பகுதியை சேர்ந்த மீன் வளத்துறை ஆய்வாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்