Connect with us

Tech

டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து செங்கோட்டை வரை உள்ள சுரங்கம்

Neque porro quisquam est, qui dolorem ipsum quia dolor sit amet, consectetur, adipisci velit, sed quia non numquam eius.

Photo: Shutterstock

டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து செங்கோட்டை வரை சுரங்கப்பாதை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

டெல்லி தலைமைச் செயலகத்தில் சுரங்கப்பாதை போன்ற அமைப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, அந்த பகுதியை ஆராயும் பணி நடைபெற்றது.

அப்போது தலைமை செயலகம் முதல் செங்கோட்டை வரை சுரங்கப்பாதை இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயர்கள் அந்த சுரங்கத்தை பயன்படுத்தியிருக்கலாம் என டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் திரு.ராம்நிவாஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

தற்போது சுரங்கப் பாதையின் முகப்பு பகுதியை கண்டறிந்துள்ளதாகவும், விரைவில் புனரமைப்பு செய்து அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-க்குள் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு தயார் செய்யப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இப்போதைய டெல்லி சட்டப்பேரவை வளாகம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நீதிமன்றமாக இருந்துள்ளது.

இங்கு மரண தண்டனை நிறைவேற்றும் அறைகள் உள்ளன.

இதைப் பற்றி ஆராய்ச்சி செய்வதில் ஒரு சிக்கல் உள்ளதாம்.

அதாவது டெல்லி மெட்ரோவுக்காக சுரங்கம் தோண்டும் சமயத்தில் இதன் பல்வேறு பகுதிகள் அடைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

மேலும் 1993ல் அவர் டெல்லியின் ச.ம.உ.வாக பொறுப்பேற்ற போதே இச்சுரங்கப்பாதை பற்றிய பேச்சு இருந்ததாகவும் ஆனால் அது வதந்தி என்று அவர் நினைத்ததாகவும் கூறியுள்ளார்.

இதை அடுத்த ஆகஸ்ட் 15ற்குள் மக்களை ஈர்க்கும் வகையில் இதைப் புதுப்பிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Entertainment

Watch Latest Movies

Watch latest movies online and explore the best of Bollywood movies, Hollywood movies and Regional Cinema

Continue Reading

Entertainment

‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் பொதுமக்கள் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி சாதனை

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இந்த லட்சிய பயணத்திட்டத்தில் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விண்வெளிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த எலன் மாஸ்க் என்பவருக்கு சொந்தமான தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். இந்த நிறுவனம் வணிக ரீதியாகவும், சொந்த ஆராய்ச்சி பணிகளுக்காகவும் செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு விண்வெளி வீரர்களையும், சரக்குகளையும் அனுப்பும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.எனினும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் லட்சியத் திட்டம் என்பது பொதுமக்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்வது ஆகும்.

 

வரலாற்றில் முதல் முறையாக தொழில்முறை விண்வெளி வீரர்கள் அல்லாத பொதுமக்கள் 4 பேரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.

அமெரிக்காவின் ‘ஷிப்ட் 4 பேெமன்ட்ஸ்’ நிறுவனத்தின் தலைவரும் பெரும் கோடீஸ்வரருமான ஜாரிட் ஐசக்மேன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் விண்வெளிக்கு பயணம் செய்துள்ளனர். இந்த பயண திட்டத்துக்கு ‘இன்ஸ்பிரேஷன்-4′ என பெயரிடப்பட்டுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இந்த லட்சிய பயணத்திட்டத்தில் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விண்வெளிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த பெண் டாக்டர்

ராக்கெட் விண்ணில் பாய்ந்த 12 நிமிடங்களில் அதன் 2-வது அடுக்கு தனியாகப் பிரிந்து, வெற்றிகரமாக புவியின் நீள்வட்டப்பாதைக்குள் விண்கலம் நுழைந்தது. இந்த விண்கலம் அடுத்த 3 நாட்களுக்கு பூமியிலிருந்து 575 கி.மீ., உயரத்தில் சுற்றி வரும் கூறப்பட்டுள்ளது.

3 நாட்கள் விண்வெளி பயணத்துக்கு பிறகு அட்லாண்டிக் கடலில் பால்கான் ராக்கெட் வெற்றிகரமாகத் தரையிறங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் இந்த பயணத்திட்டத்துக்கான‌ மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டுள்ள ‘ஷிப்ட் 4 பேமெண்ட்’ நிறுவனத்தின் நிறுவனர் ஜார்ட் ஐசக்மேன் ஆவார்.

குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள்

மற்றொருவர் டென்னிசி மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜூட் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் 29 வயதான பெண் டாக்டர் ஹேலே ஆர்சனாக்ஸ்.

சிறுவயதில் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி மீண்டுவந்துள்ள ஆர்சனாக்சுக்கு இடது செயற்கைக்கால் பொருத்தப்பட்டுள்ளது. செயற்கைக்காலுடன் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் ஆர்சனாக்ஸ் ஆவார்.

இவர்களை தவிர மற்ற 2 பேரும் இந்த பயணத்துக்காக குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள் ஆவர். அவர்கள் கிறிஸ் செம்ப்ரோஸ்கி மற்றும் சியான் பிராக்டர்.

சுற்றுலா பயணிகளுக்கு 9 மாதங்கள் பயிற்சி

இதில், 42 வயதான கிறிஸ் செம்ப்ரோஸ்கி அமெரிக்க விமானப்படை முன்னாள் வீரர்‌ ஆவார். தற்போது அவர் டேட்டா என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

51 வயதான சியான் பிராக்டர் ஒரு புவிஅறிவியல் வல்லுநர் ஆவார். கடந்த 2009ம் ஆண்டே நாசாவில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட இவர் தற்போது கல்லூரி பேராசிரியராக உள்ளார்.

விண்வெளிக்கு சுற்றுலா சென்றுள்ள இவர்கள் 4 பேரும் இதற்காக 9 மாதங்கள் ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தில் பயிற்சி பெற்றுள்ளனர். புவிஈர்ப்பு சக்தியில்லாத இடத்தில் எவ்வாறு நடந்து கொள்வது?, எவ்வாறு பயணிப்பது? உள்ளிட்ட பயிற்சிகள் இவர்கள் 4 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கேப் கெனவெரல் நகரில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்திலிருந்து இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 5.32 மணியளவில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘பால்கன் 9’ ராக்கெட் சுற்றுலா பயணிகள் 4 பேரை சுமந்து செல்லும் விண்கலத்துடன் விண்ணில் சீறிப் பாய்ந்தது.

Continue Reading
Advertisement

Trending

Copyright © 2021 Tamil Wire