Connect with us

Politics

சர்வதேச மன்னிப்பு தினம் – 7 ஜூலை 2021

சர்வதேச மன்னிப்பு தினம்

சர்வதேச மன்னிப்பு தினம்

மன்னிக்கும் குணத்தால் பகையை வென்று சமாதானத்தை பரப்ப முடியும். அதன் மகத்துவத்தை உணர்த்துவதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஜூலை ஏழாம் நாள் ‘ உலக மன்னிப்பு தினம் ‘ அனுசரிக்கப்படுகிறது. மன்னிக்கும் பண்பை சிறுவயதிலிருந்தே பெற்றோர்கள் குழந்தைகளிடம் விதைக்க வேண்டும். பெருந்தன்மையோடு மன்னிக்கும் மனப்பான்மை அனைவருக்கும் இருந்தால், நாடுகளுக்கு இடையே சச்சரவுகள் ஏற்படாது, எங்கும் அமைதி நிலவும்.

மன்னிப்பு என்ற வார்த்தை பலம் வாய்ந்தது. அவற்றை எடுத்துரைக்கும் விதமாக மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறோமோ அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.

எல்லாருமே தவறு செய்பவர்கள்தான். சிலசமயம் பிரச்சினையின் ஒரு கோணத்தை மட்டுமே பார்த்துவிட்டு உங்கள்மீது எந்த தவறும் இல்லை என்று நீங்கள் முடிவுகட்டி விடலாம். சம்மந்தபட்டவன் வந்து கேள்வி கேட்கும் வரை ஒருவர் பேசுவது சரியானது போலவே தோன்றும்.

நீங்கள் தவறு செய்வீர்கள் என்றும் உங்களிடத்தில் குறைகள் இருக்கிறது என்றும் நீங்கள் புரிந்துகொண்டால், மன்னிப்பு கேட்பது உங்களுக்கு சுலபமாக இருக்கும். ஒருவேளை நீங்கள் வளர்ந்த சூழல் அதற்கு காரணமாக இருக்கலாம். உங்கள் வீட்டில் மன்னிப்பு கேட்கும் பழக்கம் யாருக்கும் இல்லாமல் இருக்கலாம்.

சின்ன வயதிலிருந்தே இந்த பழக்கம் இல்லாததால் இப்போது மன்னிப்பு கேட்பது கஷ்டமாக இருக்கலாம். யாராவது உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்கள் மனமே கரைந்துவிடாதா. மன்னிப்பு என்பது அன்பு இரக்கம், ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு செயல் ஆகும்.

மன்னிப்பு என்பது பிறர் நமக்கு என்ன செய்திருந்தாலும் அவருக்கு விரோதமாக மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் இருக்கச் செய்துவிடும். நாம் கோபப்படுவதின் மூலம் சில தவறுகளைச் செய்கிறோம்.. இதனால் நல்ல நண்பர்களை இழக்க நேரிடுகிறது.. இச்சமயத்தில் அவர்களிடம் மன்னிப்பு கேட்பதன் மூலம் தொடர்ந்து அவர்களுடன் நட்பாக இருக் கலாம்.

எப்போது மரணம் தழுவும் என்று தெரியாத நிச்சயமற்ற மனித வாழ்வு, அதில் கோபத்தையும் பகையையும் வளர்த்துக்கொண்டு பிரிந்து இருப்பதால் எந்த பயனும் இல்லை.எப்போதோ நடந்த சண்டையால் பல வருடங்கள் பேசாமல் இருப்பவர்கள் நம்மில் பலர் உண்டு. தனிமையில் இருக்கும்போது யோசித்தால் சண்டை போடுவதற்கான காரணமே மறந்து போயிருக்கும். ஆனால் பகையை மட்டும் தொடர்ந்து கொண்டே இருப்போம். இவ்வாறு எத்தனை நண்பர்களையும் உறவுகளையும் இழந்திருப்போம் என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

உடன்பிறந்தவர்களுக்கு. ஆதரவாக பேசியதற்காக பெற்றோரிடம் சண்டை போட்டிருக்கலாம் .கொடுக்கல் வாங்கல் காரணமாக சகோதரியிடம் பேசாமல் இருந்திருக்கலாம். சொன்னதை சரியாக புரிந்து கொள்ளாததால் நண்பனிடம் கருத்து வேறுபாடு வந்திருக்கலாம். இவ்வாறு பகைக்கான காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் .மன்னிப்பு கேட்டு உறவை புதுப்பிப்பது நாமாக இருப்போம்.

பகைமையை காரணம் காட்டி பிரிந்த உறவுகள் உலகை விட்டு மறைந்து போகும்போது ‘அப்போதே பேசி இருக்கலாமே ‘என்று உள்ளுக்குள்ளே அழுவதால் எதுவும் நடந்து விடாது .மன்னிப்பு கேட்டும், மன்னிப்பு வழங்கியும் மகிழ்வோடு வாழ்வோம். மன்னிக்கும் குணத்தால் மனிதம் மலரட்டும்

இந்த மன்னிப்பு தினத்தன்று நாம் யாருக்காவது மன்னிப்பு வழங்கலாம் அல்லது யாரிடமாவது மன்னிப்பு கேட்கலாம். இதனால் வித்தியாசமான உணர்வினை பெறலாம்.. மேலும் மன்னிப்பதன் பயன் குறித்து மற்றவர்களுக்கும் அறிவுறுத்தலாம். மறப்போம்! மன்னிப்போம்!! மகிழ்ச்சியாக வாழ்வோம்!!!

Continue Reading

News

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிகள் விமானங்களுக்கு ஆகஸ்ட் 2 வரை தடை

Etihad Airways

கோவிட் -19: ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிகள் விமானங்களுக்கு ஆகஸ்ட் 2 வரை தடை விதித்துள்ளது ……

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) செல்லும் விமானங்கள் ஆகஸ்ட் 2 வரை நிறுத்தி வைக்கப்படும் என்று தேசிய விமான சேவையான எட்டிஹாட் ஏர்வேஸ் திங்களன்று தெரிவித்துள்ளது …….

“ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை இந்தியாவில் இருந்து விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பதற்கான உறுதிப்படுத்தல் எங்களுக்கு கிடைத்துள்ளது, மேலும் இது நீட்டிக்கப்படுமா என்பது எங்களுக்கு முழுமையாகத் தெரியவில்லை” எட்டிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தியை தெரிவித்துள்ளார்கள்

கடந்த மாதம், கனேடிய அரசாங்கமும் இந்தியாவில் இருந்து உள்வரும் பயணிகள் விமானங்களுக்கான தடையை இன்னும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக அறிவித்தது …

 

Last month, the Canadian government also announced that it is extending the ban on incoming passenger flights from India for another month due to the Delta variant of COVID-19

Continue Reading

News

2008-2009ம் ஆண்டுகளிலேயே இஸ்ரேலிய தொலைபேசி ஒட்டுக்கேட்பு இயந்திரத்தை ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு செயல்விளக்கம் காட்டிய அமித்ஷா

பெகாசஸ் ஸ்பைவேர் தொடர்பான சர்ச்சைகள் நாட்டை உலுக்கி உள்ள நிலையில், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைப் பற்றி மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் எழுதிய புத்தகம், கூடுதல் கவனத்தை ஈர்க்கிறது, குஜராத்தின் காந்திநகரில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இஸ்ரேலிய தொலைபேசி ஒட்டுக்கேட்பு இயந்திரத்தின் டெமோவை வழங்கியது. 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுக்குக்கு இடையில். அமித் ஷா அப்போது குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்தார்.

‘2019 எப்படி மோடி இந்தியாவை வென்றார்’ என்ற தலைப்பில் எழுதிய தனது புத்தகத்தில், காந்திநகரை சார்ந்த பத்திரிகையாளர் ராஜீவ் ஷா வெளிப்படுத்திய தகவல்களை மேற்கோள் காட்டி இதை எழுதியுள்ளார். அமித் ஷா மூத்த காவல்துறை மற்றும் உள்துறை துறை அதிகாரிகளுக்காக 2008-2000 ஆண்டு காலகட்டத்தில் இஸ்ரேலிய தொலைபேசி ஒட்டுக்கேட்பு இயந்திரத்தை செயல் விளக்கம் செய்து காட்டியுள்ளார் .அதில் “நீங்கள் ஒரு குறியீட்டை உள்ளிட வேண்டும், பின்னர் நீங்கள் விரும்பும் தொலைபேசி உரையாடலை நீங்கள் கேட்கலாம்” என சிரித்தபடி அமித் ஷா அதிகாரிகளிடம் கூறினார்,” என புத்தகத்தில் இந்த விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், அவர்கள் அந்த இயந்திரத்தை அந்த காலகட்டத்தில் வாங்கி இருந்தார்களா இல்லையா என்பது பற்றி பத்திரிகையாளருக்குத் தெரியவில்லை. ஆனால் அவரது குறிப்பில் “அந்த இயந்திரத்தைப் பற்றி கேள்விப்பட்ட அதிகாரிகள் மிகவும் பயந்து, இரண்டு மொபைல் போன்களைப் பயன்படுத்தத் தொடங்கினர், ஒன்று தனிப்பட்ட பயன்பாட்டுக்கும் , மற்றொன்று அதிகாரிகள் பயன்பாட்டிற்கும், தனி எண்ணை தங்களது நம்பிக்கைக்குரிய ஆட்களுக்கு மட்டும் அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள்” , பத்திரிகையாளர் தனது புத்தகத்தின் 42 வது பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் இருந்து வயர் உட்பட 17 ஊடக நிறுவனங்களால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன ஆனால் தொலைபேசி ஒட்டுக்கேட்பு பற்றி இதுவரை அரசாங்கம் சரியான பதிலை அளிக்கவில்லை.

Continue Reading

News

40 பத்திரிக்கையாளர், 3 எதிர்க்கட்சி தலைவர்,ஒரு நீதிபதி, 2 அமைச்சர்களின் மொபைல் போன்கள் வேவு பார்க்கப்பட்டது அம்பலம்

40 பத்திரிக்கையாளர், 3 எதிர்க்கட்சி தலைவர்,ஒரு நீதிபதி, 2 அமைச்சர்களின் மொபைல் போன்கள் வேவு பார்க்கப்பட்டது அம்பலம்:

 

pegasus என்கிற spyware மென்பொருளை பயன்படுத்தி பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் எதிரிகளின் கைபேசி வழியாக அவர்களை வேவு பார்க்கும் வேலையை செய்த நாடுகளின் பட்டியலில் இந்திய ஒன்றியமும் இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

,

இந்திய ஒன்றியத்தில் மட்டும் 300 பேர்களின் கைபேசியை வேவுபார்க்க முயற்சித்ததாக பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில் 10 கைபேசிகளில் இந்த வேவு பார்க்கும் spyware மென்பொருள் இருப்பது தடயவியல் சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

pegasus spyware  என்பது ஒற்றறிய உதவும் ஒரு கணினி மென்பொருள்.விலை 6 to 7 மிலியன் $.50 பேர்களை மட்டுமே வேவு பார்க்கலாம்

இந்த மென்பொருளை தயாரிக்கும் NSO நிறுவனம், தங்கள் வலைதளத்தில் அரசாங்களுக்கு மட்டுமே தங்கள் மென்பொருளை விற்பதாக குறிப்பிடுகிறது. ஆகவே, இந்திய ஒன்றியத்தில் இதை யார் பயன்படுத்தி இருப்பார்கள் என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

Continue Reading
Advertisement

Trending

Copyright © 2021 Tamil Wire.

error: Alert: Content is protected !!