Connect with us

Politics

ஆதார் அட்டைக்கான இரண்டு சேவைகள் நிறுத்திவைப்பு – UIDAI அறிவிப்பு!

ஆதார் அட்டை!
ஆதார் அட்டைக்கான இரண்டு சேவைகள் நிறுத்திவைப்பு – UIDAI அறிவிப்பு!

Unique Identification Authority of India (UIDAI) அமைப்பானது மேலதிக உத்தரவுகள் வரும் வரை முகவரி சரிபார்ப்புக் கடிதம் மூலம் ஆதார் அட்டையில் முகவரியைப் புதுப்பிக்கும் வசதியை நிறுத்தி உள்ளது.

1.முகவரி சரிபார்ப்பு

முன்னதாக வாடகை வீட்டில் வசிப்பவர்கள் மற்றும் பிற ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் இந்த வசதி மூலம் அவர்களின் முகவரியைப் புதுப்பிக்க முடிந்தது. ஆனால் தற்போது முகவரி சரிபார்ப்பு கடிதம் தொடர்பான விருப்பத்தை UIDAI தனது தளத்திலிருந்து நீக்கி உள்ளது.

இதுபற்றிய விளக்கத்தின் போது,

“அன்புள்ள குடியுரிமையாளர்களே, மேலதிக உத்தரவுகள் வரும் வரை முகவரி சரிபார்ப்பு கடிதத்தின் வசதி நிறுத்தப்பட்டுள்ளது.”

பிற செல்லுபடியாகும் முகவரி சான்றுகளின் பட்டியலிலிருந்து (https://uidai.gov.in/images/commdoc/valid_documents_list.pdf) எந்தவொரு முகவரி மூலமாகவும் உங்கள் முகவரியை புதுப்பிக்கலாம்” என்று UIDAI கூறியுள்ளது.

02. ஆதார் அட்டை மறுபதிப்பு (Aadhaar Card Reprint) சேவையும் நிறுத்தம்!

பழைய வடிவத்தில் ஆதார் அட்டையை ரீபிரிண்ட் செய்யும் சேவையையும் UIDAI நிறுத்தி உள்ளது. இப்போது UIDAI முன்பு போல நீண்ட மற்றும் அகலமான ஆதார் அட்டைகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் பி.வி.சி அட்டைகளை வெளியிடுகிறது.

இந்த அட்டை டெபிட் கார்டின் அளவு மற்றும் பாக்கெட் மற்றும் பணப்பையில் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இதன் காரணமாக, UIDAI பழைய பாணியிலான ஆதார் அட்டையை நிறுத்தியுள்ளது.

இதுபற்றிய விளக்கத்தின் போது,

“அன்புள்ள குடியுரிமையாளர்களே, Order Aadhaar Reprint service சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. நீங்கள் ஆன்லைனில் ஆதார் பி.வி.சி கார்டை ஆர்டர் செய்யலாம். “

அதே நேரத்தில், நீங்கள் விரும்பினால், இ- ஆதார் அட்டையை பிரண்ட் செய்யலாம் மற்றும் அதை காகித வடிவிலான ஆதாரமாக வைத்துக்கொள்ளலாம்” என்று UIDAI கூறியுள்ளது.

News

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிகள் விமானங்களுக்கு ஆகஸ்ட் 2 வரை தடை

Etihad Airways

கோவிட் -19: ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிகள் விமானங்களுக்கு ஆகஸ்ட் 2 வரை தடை விதித்துள்ளது ……

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) செல்லும் விமானங்கள் ஆகஸ்ட் 2 வரை நிறுத்தி வைக்கப்படும் என்று தேசிய விமான சேவையான எட்டிஹாட் ஏர்வேஸ் திங்களன்று தெரிவித்துள்ளது …….

“ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை இந்தியாவில் இருந்து விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பதற்கான உறுதிப்படுத்தல் எங்களுக்கு கிடைத்துள்ளது, மேலும் இது நீட்டிக்கப்படுமா என்பது எங்களுக்கு முழுமையாகத் தெரியவில்லை” எட்டிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தியை தெரிவித்துள்ளார்கள்

கடந்த மாதம், கனேடிய அரசாங்கமும் இந்தியாவில் இருந்து உள்வரும் பயணிகள் விமானங்களுக்கான தடையை இன்னும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக அறிவித்தது …

 

Last month, the Canadian government also announced that it is extending the ban on incoming passenger flights from India for another month due to the Delta variant of COVID-19

Continue Reading

News

2008-2009ம் ஆண்டுகளிலேயே இஸ்ரேலிய தொலைபேசி ஒட்டுக்கேட்பு இயந்திரத்தை ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு செயல்விளக்கம் காட்டிய அமித்ஷா

பெகாசஸ் ஸ்பைவேர் தொடர்பான சர்ச்சைகள் நாட்டை உலுக்கி உள்ள நிலையில், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைப் பற்றி மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் எழுதிய புத்தகம், கூடுதல் கவனத்தை ஈர்க்கிறது, குஜராத்தின் காந்திநகரில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இஸ்ரேலிய தொலைபேசி ஒட்டுக்கேட்பு இயந்திரத்தின் டெமோவை வழங்கியது. 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுக்குக்கு இடையில். அமித் ஷா அப்போது குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்தார்.

‘2019 எப்படி மோடி இந்தியாவை வென்றார்’ என்ற தலைப்பில் எழுதிய தனது புத்தகத்தில், காந்திநகரை சார்ந்த பத்திரிகையாளர் ராஜீவ் ஷா வெளிப்படுத்திய தகவல்களை மேற்கோள் காட்டி இதை எழுதியுள்ளார். அமித் ஷா மூத்த காவல்துறை மற்றும் உள்துறை துறை அதிகாரிகளுக்காக 2008-2000 ஆண்டு காலகட்டத்தில் இஸ்ரேலிய தொலைபேசி ஒட்டுக்கேட்பு இயந்திரத்தை செயல் விளக்கம் செய்து காட்டியுள்ளார் .அதில் “நீங்கள் ஒரு குறியீட்டை உள்ளிட வேண்டும், பின்னர் நீங்கள் விரும்பும் தொலைபேசி உரையாடலை நீங்கள் கேட்கலாம்” என சிரித்தபடி அமித் ஷா அதிகாரிகளிடம் கூறினார்,” என புத்தகத்தில் இந்த விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், அவர்கள் அந்த இயந்திரத்தை அந்த காலகட்டத்தில் வாங்கி இருந்தார்களா இல்லையா என்பது பற்றி பத்திரிகையாளருக்குத் தெரியவில்லை. ஆனால் அவரது குறிப்பில் “அந்த இயந்திரத்தைப் பற்றி கேள்விப்பட்ட அதிகாரிகள் மிகவும் பயந்து, இரண்டு மொபைல் போன்களைப் பயன்படுத்தத் தொடங்கினர், ஒன்று தனிப்பட்ட பயன்பாட்டுக்கும் , மற்றொன்று அதிகாரிகள் பயன்பாட்டிற்கும், தனி எண்ணை தங்களது நம்பிக்கைக்குரிய ஆட்களுக்கு மட்டும் அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள்” , பத்திரிகையாளர் தனது புத்தகத்தின் 42 வது பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் இருந்து வயர் உட்பட 17 ஊடக நிறுவனங்களால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன ஆனால் தொலைபேசி ஒட்டுக்கேட்பு பற்றி இதுவரை அரசாங்கம் சரியான பதிலை அளிக்கவில்லை.

Continue Reading

News

40 பத்திரிக்கையாளர், 3 எதிர்க்கட்சி தலைவர்,ஒரு நீதிபதி, 2 அமைச்சர்களின் மொபைல் போன்கள் வேவு பார்க்கப்பட்டது அம்பலம்

40 பத்திரிக்கையாளர், 3 எதிர்க்கட்சி தலைவர்,ஒரு நீதிபதி, 2 அமைச்சர்களின் மொபைல் போன்கள் வேவு பார்க்கப்பட்டது அம்பலம்:

 

pegasus என்கிற spyware மென்பொருளை பயன்படுத்தி பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் எதிரிகளின் கைபேசி வழியாக அவர்களை வேவு பார்க்கும் வேலையை செய்த நாடுகளின் பட்டியலில் இந்திய ஒன்றியமும் இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

,

இந்திய ஒன்றியத்தில் மட்டும் 300 பேர்களின் கைபேசியை வேவுபார்க்க முயற்சித்ததாக பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில் 10 கைபேசிகளில் இந்த வேவு பார்க்கும் spyware மென்பொருள் இருப்பது தடயவியல் சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

pegasus spyware  என்பது ஒற்றறிய உதவும் ஒரு கணினி மென்பொருள்.விலை 6 to 7 மிலியன் $.50 பேர்களை மட்டுமே வேவு பார்க்கலாம்

இந்த மென்பொருளை தயாரிக்கும் NSO நிறுவனம், தங்கள் வலைதளத்தில் அரசாங்களுக்கு மட்டுமே தங்கள் மென்பொருளை விற்பதாக குறிப்பிடுகிறது. ஆகவே, இந்திய ஒன்றியத்தில் இதை யார் பயன்படுத்தி இருப்பார்கள் என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

Continue Reading
Advertisement

Trending

Copyright © 2021 Tamil Wire.

error: Alert: Content is protected !!