Connect with us

Political News

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் எல்லையில் உள்ள பாலத்தின் கீழ் குவிந்துள்ள 10 ஆயிரம் அகதிகள்

Neque porro quisquam est, qui dolorem ipsum quia dolor sit amet, consectetur, adipisci velit, sed quia non numquam.

Photo: Shutterstock
தென் அமெரிக்க நாடுகளில் இருந்து மெக்சிகோ வழியாக, உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான அமெரிக்காவிற்கு லட்சக்கணக்கானோர் சட்டவிரோதமாக நுழைவது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதிவேற்ற பின், அகதிகள் தொடர்பாக டிரம்ப் அரசு விடுத்திருந்த பல கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தினார். இதன் பின்னர் அமெரிக்காவிற்குள் வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் எல்லையில் அமைந்திருக்கும் டெல் ரியோ நகரின் நெடுஞ்சாலைப் பாலத்தின் அடியில் சுமார் 10 ஆயிரம் அகதிகள் குவிந்துள்ளனர். ஹைதி, வெனிசுலா, கியூபா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இவர்கள் ரியோ கிராண்டி ஆற்றைக் கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளனர்.

அகதிகளுக்கு குடிநீர், கழிப்பிடம், துண்டுகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக டெல் ரியோ நகரின் எல்லை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் போதுமான உணவு கிடைக்காததால், சிலர் மீண்டும் ரியோ கிராண்டி ஆற்றைக் கடந்து மெக்சிகோவிற்கு சென்று, உணவு உள்ளிட்டவற்றை சேகரித்துக் கொண்டு மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த 5 நாட்களில் இவர்கள் அனைவரும் அகதிகள் முகாமிற்கு அனுப்பப்பட உள்ளனர். ஆகஸ்ட் மாத்தில் மட்டும் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழைந்த 1.95 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Entertainment

Watch Latest Movies

Watch latest movies online and explore the best of Bollywood movies, Hollywood movies and Regional Cinema

Continue Reading

Political News

பாகிஸ்தான் பயணம் ரத்து: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தானுக்கு மேற்கொள்ளவிருந்த ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியின் பயணத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திங்கள்கிழமை ரத்து செய்தது.

இங்கிலாந்து ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்ளவிருந்தன. அக்டோபர் 13 மற்றும் 14-ம் தேதி ராவல்பிண்டியில் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. இங்கிலாந்து மகளிர் அணி டி20 தொடரைத் தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவிருந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி போட்டி தொடங்குவதற்கு சற்று முன்னதாக கடைசி நேரத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் காரணம் காட்டி பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.இந்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்திருப்பது அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கும், வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளிக்கவுள்ளது.

Continue Reading

Political News

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் செப். 24-இல் சந்திப்பு: வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 24-ம் தேதி சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை திங்கள்கிழமை அறிவித்தது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செப்டம்பர் 24-ம் தேதி நடைபெறவுள்ள ‘க்வாட்’ அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இந்த வாரம் அமெரிக்க புறப்படுகிறார்.
இதில் பங்கேற்கச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸனுடன் தனிப்பட்ட முறையில் பேச்சு நடத்துவார் என முன்பு தகவல்கள் வெளியாகின.இந்த நிலையில் வெள்ளை மாளிகை இதனை உறுதிபடுத்தியுள்ளது.

இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோரை அமெரிக்க அதிபர் பைடன் சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement

Trending

Copyright © 2021 Tamil Wire